
இதை யாருக்காக எழுதுறேன், அவங்க இதை படிப்பாங்களா மாட்டாங்களானுலாம் எனக்குத் தெரியாது. அவ்ளோ பெரிய ஆர்ட்டிக்கிள்(Article) படிக்கிற அளவுக்கு பொறுமையோ நேரமோ இப்போ யாருக்கும் இல்ல. இதையே சின்னச் சின்ன Reelஅ கட் பண்ணி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்னு வச்சா ஒருவேளை பார்ப்பாங்க. அப்படிப் பார்த்தாலும் "பூமர்"-னு ஒரே வார்த்தையில கலாய்ச்சுட்டுப் போயிட்டே இருப்பாங்க.
ஜனநாயகத்துல மக்கள் தான் மன்னர்கள். 'மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'னு சொல்லி அதை அப்படியே ஏத்துக்கணும், விமர்சனம் பண்ணக்கூடாதுனு சொல்வாங்க. மேலோட்டமா பார்த்தா அது கரெக்ட்னு தான் தோணும். ஆனா, இந்த 2026 எலக்ஷன் ரிசல்ட்டை வெறும் "மக்களின் தீர்ப்பு"னு அவ்ளோ ஈஸியா கடந்து போக முடியல.
மக்கள் நிஜமாவே யோசிச்சு தான் ஓட்டு போட்டாங்களா? இல்ல, 'நீ இப்படித்தான் யோசிக்கணும்'னு யாரோ அவங்கள பிரைன்வாஷ்(Brainwash) பண்ணி ஓட்டு போட வச்சாங்களா? இந்தக் கேள்வியை நாம கண்டிப்பா கேட்டுத்தான் ஆகணும்.
இதுக்குத் தானா ஓட்டு போட்டீங்க?
எலக்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் வெளிய வர்ற காரணங்கள் எல்லாம் ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு:
"பிரெண்ட்ஸ் எல்லாரும் ஆபீஸ்ல பேசி வச்சுட்டு ஓட்டு போட்டோம்"
"என் பேரன் கேட்டான் / பையன் கேட்டான்"
"வீட்டுல குழந்தை அழுதுச்சுனு போட்டேன்"
"எப்படியும் இவங்க ஜெயிக்க மாட்டாங்க, திமுக தான் ஜெயிக்கும்னு ஒரு பரிதாபத்துல போட்டேன்"
சரி ஜெயிச்சதுக்கு அப்புறமா, "ஏன்பா ஓட்டு போட்டீங்க?"னு கேட்டா, "ஒரு சேஞ்ச் வேணும்ல, அதுக்குத்தான் போட்டேன்"ங்குறாங்க.
ஒரு சினிமா நடிகன் எப்படி முதலமைச்சர் ஆகலாம்னு நான் வெத்து கேள்வி கேட்கல. யார் வேணாலும் ஆகலாம் - ஆட்டோ டிரைவர், வாத்தியார், சயின்டிஸ்ட்னு எந்தத் துறையில இருந்தும் வரலாம்.
ஆனா பிறந்து, வளர்ந்து, டூயட் பாடி, டான்ஸ் ஆடிட்டு, அங்கிருந்து டைரக்ட்டா முதலமைச்சர் நாற்காலிக்கு ஜம்ப் பண்றது எந்த வகையில நியாயம்? இதை மக்கள் எப்படி அனுமதிச்சாங்கங்குறது தான் என் கேள்வி. எம்ஜிஆர் காலத்தோட இந்த சினிமா மோகம் முடிஞ்சு போச்சு, இனிமே மக்கள் அந்த தப்பை பண்ண மாட்டாங்கனு நினைச்சது ரொம்ப தப்பான கணிப்புனு இப்போ புரியுது.
நான் எதிர்பார்த்த கட்சி வரலங்குற ஆதங்கத்திலையோ, இல்லை ஒரு சினிமாக்காரன் நம்மளை ஆள வந்துட்டானேங்குற வெறுப்புலயோ இதை நான் எழுதல. படிச்ச மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காம ஓட்டு போட்டுட்டாங்களேங்குற வருத்தத்துல தான் எழுதுறேன்.
"இல்ல, மக்கள் நல்லா சிந்திச்சு தான் ஓட்டு போட்டாங்க"னு நீங்க சொன்னா, அதை ஏத்துக்கவோ மறுக்கவோ எனக்கு இன்னும் அஞ்சு வருஷம் ஆகும். இப்போதைக்கு அவங்க சிந்திச்சு தான் போட்டாங்கங்குறத நான் ஏத்துக்க தயாரா இல்ல.
அந்த 'மாற்றம்' என்ன ப்ரோ?
சரி, ஒரு பேச்சுக்கு சிந்திச்சு தான் போட்டாங்கனு வச்சுப்போம். என்ன சிந்திச்சாங்க? "மாற்றம் வேணும்". என்ன மாற்றம்னு கேட்டா, "அதெல்லாம் தெரியாது, ஆனா மாற்றம் வேணும்". இது என்ன மாதிரியான மைண்ட்செட்?
ஏதோ கிராமத்துல இருக்கிற படிக்காத மக்கள் இப்படி பண்றாங்கனு பார்த்தா, அதுவும் இல்ல. விஜய்க்குக் கிடைச்சிருக்கிற ஓட்டு Bank முழுக்க முழுக்க சென்னை, கோயம்புத்தூர் மாதிரியான பெரிய சிட்டிகள்ல இருக்கிற, படிச்ச, சோபிஸ்டிகேட்டடா(Sophisticated) வாழ்ற மக்களோட ஓட்டு. மாற்றம் வேணும்னு கேட்கறது தப்பில்ல. ஆனா அந்த மாற்றத்தை விஜய் கொடுப்பார்னு இவங்க எந்த அடிப்படையில நம்புனாங்க? எம்ஜிஆர் சமாதியில காது வச்சு கேட்டு, "இன்னும் வாட்ச் சத்தம் கேட்குது"னு நம்புற கூட்டம் இன்னும் மாறாம அப்படியே தான் இருக்கானு தோணுது.
Hyper reality and adrenaline rush
ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது. சோஷியல் மீடியா மூலமா இவங்க பயங்கரமா இன்ஃப்ளூயன்ஸ் பண்ணப்பட்டிருக்காங்க. இது விஜய் கட்சி ஆரம்பிச்ச இந்த ரெண்டு வருஷத்துல நடந்தது இல்ல, ரொம்ப நாளாவே பிளான் பண்ணி கல்டிவேட் பண்ணப்பட்டிருக்கு. இவங்களை அப்படியே தனிமைப்படுத்தி, வேற ஒரு உலகத்துக்குக் கொண்டு போய், அங்க செட் பண்ணப்பட்ட ஒரு 'மெட்டா நெரேட்டிவ்' தான் உண்மைனு நம்ப வச்சிருக்காங்க. போஸ்ட்-மாடர்னிசம்(Post Modernism) கான்செப்ட்படி, இவங்க ஒரு பெரிய 'ஹைப்பர் ரியாலிட்டி' (Hyper-reality)-ல வாழ்ந்துட்டு இருக்காங்க.
இந்த மக்கள் எப்பவுமே ஒருவிதமான 'அட்ரினலின் ரஷ்' (Adrenaline rush) எதிர்பார்த்துட்டே இருக்காங்க:
சினிமா காலம்: ஒரு ஹீரோ, அவருக்கு ஒரு பிரச்சனை, அதை கொடுக்கிற ஒரு வில்லன். ஹீரோ எப்படி அந்த வில்லனை அழிச்சு வெளிய வருவார்னு தியேட்டர்ல சீட் நுனியில உட்கார்ந்து பார்ப்பாங்க.
டிவி & பிக் பாஸ் காலம்: சினிமா நடிப்புனு தெரிஞ்சதும் போர் அடிச்சுடுச்சு. அப்புறம் டிவி சீரியல், அதுவும் போர் அடிச்சதும் பிக் பாஸ் மாதிரியான ரியாலிட்டி ஷோக்கள்.
அரசியல் காலம்: பிக் பாஸ்ஸும் ஸ்கிரிப்டட்னு தெரிஞ்சதும், இப்போ அந்த ரஷ்ஷை நேரடி அரசியல்ல தேட ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்காக தங்களோட ஜனநாயக உரிமையையே அடமானம் வைக்க ரெடியா இருக்காங்க.
இதைத்தான் விஜய் பக்காவா கேப்பிடலைஸ்(Capitalise) பண்ணியிருக்கார். தன்னை உலகத்தைக் காப்பாத்த வந்த ரட்சகனாகவும், திமுகவை வில்லனாகவும் உருவகப்படுத்தி, "நான் இந்த வில்லனை அழிக்கணும்னா நீங்க எனக்கு ஓட்டு போடணும்"னு மக்களை நம்ப வச்சுட்டார். மக்களும் பிக் பாஸ் வீட்டுல இருக்கிற கண்டஸ்டன்ட்டுக்கு ஓட்டு போடுற மாதிரி கும்பல் கும்பலா போய் ஓட்டு போட்டுருக்காங்க.
இது ஒரு இன்டர்வல் பிளாக்
இப்போ நடக்கிறது, அதாவது அவருக்கு மெஜாரிட்டி கிடைக்காம இருக்கிறது, அத நிரூபிக்க வேண்டிய கட்டாயம்... இதெல்லாம் இந்த மக்களுக்கு ஒரு 'இன்டர்வல் பிளாக்' மாதிரி. பாப்கார்ன் சாப்பிட்டுட்டு வந்து சீட்ல உட்கார்ந்து, "நம்ம ஹீரோ மெஜாரிட்டி வாங்கிடுவாரா?"னு ஆவலா பார்த்துட்டு இருக்காங்க. கவர்னர் இப்போ ஒரு குட்டி வில்லன் ஆயிட்டார். இதெல்லாம் தாண்டி, அவங்க எதிர்பார்க்கிற ஒரே விஷயம், ***"சி. ஜோசப் விஜய் என்னும் நான்..."***ங்குற அந்த மாஸ் டயலாக் தான்.
சரி, நடக்கிறது நடந்துருச்சு. இப்போ உங்களுக்கு என்ன வேணும்? அவரு பதவியேற்கணும், அந்த மாஸ் டயலாக்கை நீங்க வீடியோ எடுக்கணும், இன்ஸ்டால ரீல்ஸ் போடணும், ஸ்டேட்டஸ் வச்சு ஃபயர் விடணும். அவ்ளோதானே? பண்ணிட்டுப் போங்க. இந்த ஆர்ட்டிக்கிளை நீங்க படிச்சுட்டு இருக்கும்போது ஒருவேளை அவரு பதவியேற்றிருக்கலாம். ஆசை தீர ஸ்டேட்டஸ் வச்சுக்கோங்க. எந்தப் பிரச்சனையும் இல்ல.
ஆனா அதுக்கப்புறம் என்ன பண்ணப் போறீங்க? நிஜமா யார் ஆட்சி செய்யப் போறா? விஜய்யா? இல்ல அவருக்கு பின்னாடி இருக்கிற ஐஏஎஸ் ஆபீசர்ஸா? பொறுத்திருந்து தான் பார்க்கணும். எப்படியோ அவரு சிஎம் ஆயிட்டாரு. ஆனா அவரு நிஜமாவே ஆட்சி பண்றாரா, இல்ல நீங்க இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ல மட்டும் ஆட்சி நடக்குற மாதிரி ஃபீல் பண்ணிட்டு இருக்கப் போறீங்களானு பார்க்கணும். ரீல்ஸ்ல மட்டும் ஆட்சி நடக்காம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு இருக்கு.
முடிவாக...
நமக்கும் நம்ம அடுத்த தலைமுறைக்கும் இடையில இருக்கிற பயாலஜிக்கல் கேப் வேணா 10 வருஷமா இருக்கலாம், ஆனா சோஷியல் கேப் 50-ல இருந்து 100 வருஷமா இருக்கு! அடுத்த ஜெனரேஷன் கிட்ட நாம நிறைய பேச வேண்டியிருக்கு. நான் திமுகவோட வரலாற்றைக் கிளாஸ் எடுக்க சொல்லல. "History எல்லாம் இருக்கட்டும் ப்ரோ, இப்போ என்ன?"னு அவங்க கேட்கலாம். ஆனா, "இந்த மாதிரி மாயையில சிக்கிக்காதீங்க, வெளிய வாங்க"னு நாம அவங்களுக்கு புரிய வைக்கணும்.
பைனலா நான் சொல்றது இதுதான்: Democracy is not the best option, but we don't have anything better than that.
வாழ்க ஜனநாயகம்! புதிய வரலாற்றைத் தொடங்கும் திரு. விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
More Articles



