
சோசியல் மீடியா யூஸ் பண்ற எல்லாருமே ஏதோ ஒரு வகையில ஒரு பபிள்க்குள்ள (bubble) தான் மாட்டிக்கிட்டு இருக்கோம். நாம பார்க்குற வீடியோஸ், ரீல்ஸ் (reels) வச்சு நாம என்ன நினைச்சுக்கிறோம்னா, "ஓகே, உலகத்துல எந்த மூலையில என்ன நடந்தாலும் உடனே நம்ம போனுக்கு வந்துடுது" அப்படின்னு. ஆனா, நிஜம் அது கிடையாது. உங்களுக்கே தெரியாம உங்களை ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடைச்சு வைக்கிறதுதான் இந்த சோசியல் மீடியா.
இதத்தான் 'சோசியல் மீடியா பபிள்' (Social Media Bubble) அப்படின்னு சொல்றாங்க. 2011-ல இருந்தே இதைப்பத்தி நிறைய பேர் எக்ஸ்போஸ் (expose) பண்ணிட்டு இருந்தாலும், ரீசண்டா நடந்த 2026 எலக்ஷன் ரிசல்ட்ஸ்க்கு (election results) அப்புறம்தான் இதப்பத்தி எல்லாரும் ஓப்பனா பேச ஆரம்பிச்சிருக்காங்க. இப்படி ஒன்னு இருக்குறதே இப்பதான் பல பேருக்கு புரியவே செஞ்சிருக்கு. ஆனா, இதப்பத்தின அவேர்னஸ் (awareness) எல்லாருக்கும் வந்துடுச்சான்னு கேட்டா, டவுட் தான்.
சோசியல் மீடியா பபிள்-னா என்ன?
சொசைட்டில (society) ஒரு இன்சிடென்ட் (incident) நடக்குதுன்னு வச்சுப்போம். அதைப்பத்தி உங்களுக்குன்னு ஒரு கருத்து இருக்கும்; அது சப்போர்ட்டா (support) இருக்கலாம் இல்ல எதிர்ப்பா இருக்கலாம். எக்ஸாம்பிளுக்கு (example), கரூரில் நடந்த ஸ்டாம்பீட் (stampede - நெரிசல்) சம்பவத்தையே எடுத்துக்குவோம். இந்த விஷயத்துல சோசியல் மீடியாவே ரெண்டு குரூப்பா பிரிஞ்சிருந்தது.
ஒரு குரூப்: விஜய்க்கு சப்போர்ட் பண்ணிட்டு, அப்போதைய டிஎம்கே (DMK) கவர்ன்மென்ட்க்கு எதிரா பேசினவங்க.
இன்னொரு குரூப்: விஜய்யை எதிர்த்துட்டு, கவர்ன்மென்ட் மேல தப்பில்லைன்னு சொன்னவங்க.
இப்போ விஜய்க்கு எதிரா இருக்குற ஒருத்தர், இதப்பத்தி ஒரு ரீலோ இல்ல லாங் ஃபார்ம் வீடியோவோ (long-form video) கிரியேட் பண்ணி சோசியல் மீடியால போஸ்ட் போடுறார். அவர் என்ன நினைப்பார்னா, "நாம செம்ம ஸ்ட்ராங்கா, வேலிட் இன்பர்மேஷன் (valid information) அண்ட் டேட்டாவோட (data) நம்ம எதிர்ப்பை பதிவு பண்ணிட்டோம். இதை மத்தவங்க பார்த்துட்டு நம்ம பக்கம் வந்துடுவாங்க" அப்படின்னு.
ஆனா யோசிச்சு பாருங்க, இந்த கன்டென்ட்டோட டார்கெட் ஆடியன்ஸ் (target audience) யாரு? விஜய்யை சப்போர்ட் பண்றவங்கதானே? அவங்கதானே இதை பார்க்கணும்? ஆனா நிஜத்துல, அவங்க யாருமே இதை பார்க்க மாட்டாங்க!
ட்விஸ்ட்டே இங்கதான் இருக்கு: அந்த வீடியோவுக்கு நிறைய வியூஸும் லைக்ஸும் வரலாம். ஆனா அது எல்லாமே ஆல்ரெடி விஜய்யை எதிர்க்குற அவரோட அதே மைண்ட்செட் (mindset) உள்ள குரூப்கிட்ட இருந்துதான் வருமே தவிர, ஆப்போசிட் சைடுல (opposite side) இருக்குற விஜய்யோட சப்போர்ட்டர்ஸ் கிட்ட இருந்து ஒரு வியூ கூட வராது. ஏன்னா, சோசியல் மீடியா அல்கோரிதம் (Algorithm) அப்படி டிசைன் பண்ணப்பட்டிருக்கு.
இதனால விஜய்யை எதிர்க்குறவங்க அவங்களுக்கான ஒரு தனி உலகத்துலயும், சப்போர்ட் பண்றவங்க அவங்களுக்கான ஒரு தனி உலகத்துலயும் வாழ்ந்துட்டு இருக்காங்க. இவங்க பேசுறது அவங்களுக்கு கேட்காது, அவங்க பேசுறது இவங்களுக்கு கேட்காது.
இதுதான் 2026 எலக்ஷன்லயும் நடந்தது. ஒரு குரூப் "டிஎம்கே தான் வின் பண்ணும்" அப்படின்ற பபிள்க்குள்ளயே இருந்தாங்க. இன்னொரு பக்கம், விஜய்க்கு சப்போர்ட்டா வந்த போஸ்ட்டோ, ரீல்ஸோ இந்த பபிள்ல இருந்தவங்க கண்ணுக்கே தெரியல. கடைசியில, எந்த குரூப்போட பபிள் பெருசா இருந்ததோ, அவங்க எலக்ஷன்ல ஜெயிச்சுட்டாங்க.
இந்த அல்கோரிதம் எப்படி வேலை செய்யுது?
நாம பபிளை விட்டு வெளிய வர்றதுக்கு முன்னாடி, இந்த அல்கோரிதம் எப்படி வேலை செய்யுதுன்னு புரிஞ்சுக்கணும். இன்ஸ்டாகிராம், பேஸ்புக்னு நீங்க ஸ்க்ரால் (scroll) பண்ணும்போது, உங்களோட ஒவ்வொரு சின்ன அசைவும் அல்கோரிதம்க்கு ஒரு சிக்னல் (signal).
ஒரு ரீலை ஃபுல்லா பார்த்தா: "இந்த யூசருக்கு இந்த கன்டென்ட் பிடிச்சிருக்கு"ன்னு சிக்னல் போகும்.
அதே ரீலை 2-3 வாட்டி பார்த்தா: "இவருக்கு இந்த கன்டென்ட் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு"ன்னு அல்கோரிதம் நோட் பண்ணிக்கும்.
வந்த உடனே ஸ்வைப் (swipe) பண்ணிட்டா: "இவருக்கு இது பிடிக்கல" அப்படின்னு அர்த்தம்.
இதுமட்டும் இல்லாம நீங்க போடுற லைக், கமெண்ட், ஷேர், அப்புறம் சேவ் (save) பண்றது எல்லாமே சிக்னல்ஸ் தான். ஏன், ஸ்க்ரால் பண்ணும்போது ஒரு போட்டோவை சும்மா ரெண்டு செகண்ட் நிறுத்தி பார்த்தா கூட அதுவும் ஒரு சிக்னல் தான்! உங்க கட்டைவிரலோட ஒவ்வொரு மூவ்மென்ட்டும் (movement) உங்களை பத்தின இன்பர்மேஷனை அல்கோரிதம்க்கு கொடுத்துட்டே இருக்கு.
உடனே அல்கோரிதம் என்ன பண்ணும்? "ஓகே, உனக்கு இது பிடிக்குமா? இதே மாதிரி இருக்குற இன்னொரு வீடியோவை பாரு"ன்னு காட்டும். அதுமட்டும் இல்லாம, உங்களோட அதே வயசு, அதே ஏரியா, அதே டேஸ்ட் இருக்குற இன்னொரு யூசர் பார்த்த வீடியோவை உங்களுக்கு காட்டும், நீங்க பார்த்ததை அவருக்கு காட்டும். இப்படித்தான் ஒரே மாதிரி யோசிக்கிறவங்களை ஒன்னா சேர்த்து ஒரு பபிள்க்குள்ள லாக் (lock) பண்ணுது.
உதாரணத்துக்கு: "இந்த உலகம் தட்டையானது (Flat Earth)" அப்படின்னு நீங்க நம்பி ஒரு வீடியோ பார்த்தீங்கன்னா, உலகம் தட்டைதான்னு ப்ரூவ் பண்ற வீடியோவா காட்டிட்டே இருக்கும். கடைசி வரைக்கும் உலகம் உருண்டைன்ற நிஜம் உங்களுக்கு தெரியவே தெரியாது.
இப்படித்தான் டிவிடி (TVK), டிஎம்கே (DMK) அப்படின்னும், சிஎஸ்கே (CSK), ஆர்சிபி (RCB) அப்படின்னும் எல்லாரும் தனித்தனி பபிள்ல இருக்கோம். இப்போ எலக்ஷன் ரிசல்ட் வந்ததால இது வெளிய தெரிஞ்சது. இதுவே சிஎஸ்கே-ஆர்சிபி யாருக்கு சப்போர்ட் அதிகம்னு ஒரு எலக்ஷன் வச்சா, நாம சிஎஸ்கே தான் ஜெயிக்கும்னு நினைப்போம், ஆனா ஆர்சிபி ஜெயிக்கும்போதுதான் நமக்கே அந்த பபிள் உடையறது தெரியும்.
அப்போ நாம இங்க சண்டை போடுறது ஆப்போசிட் பார்ட்டி கூடவோ இல்ல மத்த ஃபேன்ஸ் கூடவோ கிடையாது; யூ ஆர் பைட்டிங் வித் அல்கோரிதம் (You are fighting with the algorithm).
இந்த பபிளை எப்படி கிராஸ் (cross) பண்றது?
இங்கதான் நமக்கு 'ஸ்விங் ஆடியன்ஸ்' (Swing Audience) ஹெல்ப் பண்ண போறாங்க. இவங்கதான் ரெண்டு பபிளையும் இணைக்கிற ஒரு பிரிட்ஜ் (bridge).
யார் இந்த ஸ்விங் ஆடியன்ஸ்? ஒரு சம்பவம் நடக்கும்போது எந்த பக்கம் சப்போர்ட் பண்றதுன்னு தெரியாம நடுவுல இருக்குற ஒரு சின்ன செட் ஆஃப் ஆடியன்ஸ் (set of audience) தான் இவங்க. இவங்களை எந்த டீம் ஃபர்ஸ்ட் அப்ரோச் (approach) பண்ணுதோ, அவங்க அந்த பக்கம் சாய்ஞ்சிடுவாங்க.
கரூரில் நடந்த சம்பவத்துல, நீங்க விஜய்க்கு எதிரானவரா இருந்தா, ரொம்ப ஃபாஸ்ட்டா பிராப்பர் இன்பர்மேஷனோட (proper information) இந்த ஸ்விங் ஆடியன்ஸை ரீச் பண்ணனும். அவங்க உங்க வீடியோவை ஃபுல்லா பார்த்து லைக் பண்ணிட்டாங்கன்னா, அல்கோரிதம் உடனே அவங்களை மாதிரி இருக்குற மத்தவங்களுக்கும் அதை காட்டும். சில சமயம் விஜய் ஃபேன்ஸே குழப்பத்துல இருப்பாங்க, அவங்க உங்க கருத்தை அக்செப்ட் (accept) பண்ணிட்டாங்கன்னா, உங்க கன்டென்ட் அப்படியே விஜய் ஃபேன்ஸோட பபிள்க்குள்ள பெனிட்ரேட் (penetrate - ஊடுருவல்) ஆகிடும். இப்படித்தான் பபிளை கிராஸ் பண்ண முடியும்.
கன்டென்ட் கிரியேட்டர்ஸ் (Content Creators) என்ன பண்ணனும்?
இந்த ஸ்விங் ஆடியன்ஸை அட்ராக்ட் பண்ண ரெண்டு விஷயம் ரொம்ப முக்கியம்: ஃபாஸ்ட் அண்ட் அக்யூரெட் (Fast and Accurate). ஒரு விஷயம் நடந்த உடனே வேகமாவும், கரெக்டான தகவலோடும் கொடுக்கணும். இத ஒரு தனி மனுஷனா செய்ய முடியாது, ஒரு வெல்-எக்விப்ட் டீம் (well-equipped team) வேணும்.
நெகட்டிவ் அப்ரோச் செட் ஆகாது: ஸ்விங் ஆடியன்ஸை இழுக்கிறேன்னு சொல்லி அவங்களை திட்டினாலோ, அப்யூஸ் (abuse) பண்ணினாலோ அவங்க ஆப்போசிட் சைடு போயிடுவாங்க. ஒரு ஹெல்தியான ஆர்கியூமென்ட்டை (healthy argument) கொண்டு வரணும். "டேய் நீ எல்லாம் ஒரு தற்குறி" அப்படின்னு சொன்னா, "ஆமாடா நான் தற்குறிதான், நான் விஜய்க்கே ஓட்டு போடுறேன்"னு போயிடுவாங்க.
நடந்து முடிஞ்ச எலக்ஷன்ல விஜய் ஃபேன்ஸை 'தற்குறி'ன்னு மத்தவங்க கலாய்த்ததுதான், அவங்களை இன்னும் ஸ்ட்ராங்கா விஜய்க்கு சப்போர்ட் பண்ண வச்சது. சோ, உங்க கன்டென்ட் டீசன்ட்டாகவும் (decent), கியூரியாசிட்டியை (curiosity) தூண்டுற மாதிரியும் இருக்கணும்.
கன்டென்ட் கன்சியூமரா (Content Consumer) நாம என்ன பண்ணனும்?
"பாஸ், நான் கன்டென்ட்லாம் கிரியேட் பண்ணல, சும்மா டெய்லி ஒரு மணி நேரம் சோசியல் மீடியால ஸ்க்ரால் பண்ற சாதாரண ஆள் தான்" அப்படின்னா, நீங்களும் ஒரு பபிள்ல தான் இருக்கீங்கன்னு முதல்ல புரிஞ்சுக்கோங்க.
இதிலிருந்து வெளிய வரணும்னா, பிரீக்வென்ட்டா (frequently) உங்களோட:
சர்ச் ஹிஸ்டரி (Search history)
வாட்ச் ஹிஸ்டரி (Watch history)
சேவ்ட் போஸ்ட் (Saved posts/reels)
இது எல்லாத்தையும் கிளியர் (clear) பண்ணிட்டே இருக்கணும். அப்போதான் அல்கோரிதம் உங்களை பத்தி படிச்சு வச்சிருக்கறதை மறந்துட்டு, புதுப்புது கன்டென்ட்டை உங்க ஃபீடுல (feed) காட்டும். "இல்லப்பா, எனக்கு இதெல்லாம் வேணாம், நான் இப்படியே இருந்துக்கிறேன்" அப்படின்னா அது உங்களோட சாய்ஸ் (choice).
கடைசியா நாம புரிஞ்சுக்க வேண்டியது: நாம இங்க சண்டை போடுறது மக்கள் கூட கிடையாது, அல்கோரிதம் கூடவும், ஃபேக் நியூஸ் (fake news) கூடவும் தான்!
More Articles



