Back to Home

Postmodernism என்றால் என்ன ?

By RV
Postmodernism என்றால் என்ன ?

இன்னைக்கு நாம வாழ்றது ஒரு மாடர்ன் வேர்ல்ட் (modern world). இந்த நவீன வாழ்க்கையில ஏகப்பட்ட நல்ல விஷயங்கள், சொகுசான வசதிகள் நமக்குக் கிடைச்சிருக்கு. நடக்கவே தேவையில்லாம கார், ஏசி (AC), லிஃப்ட் (lift)-னு ரொம்ப சோபிஸ்டிகேட்டடான (sophisticated) ஒரு ஜாலியான லைஃப். உடம்புல ஒரு வலி வந்தா கூட, உடனே ஒரு பெயின் கில்லர் (pain killer) போட்டு அதை சரி பண்ணிட முடியுது.

இந்த மாதிரி டெக்னாலஜி (technology) வளர்ந்ததுக்குக் காரணம் மாடர்ன் தாட்ஸ் (modern thoughts) தான். நாம சாப்பிடுற சாப்பாடு, தங்குற இடம், என்டர்டெய்ன்மென்ட் (entertainment), ஸ்போர்ட்ஸ் (sports), மருத்துவம்னு எல்லாமே நமக்காகப் பார்த்துப் பார்த்து டிசைன் பண்ணப்பட்டிருக்கு. ஆனா, இதுக்கு பின்னாடி முதலாளித்துவ கொள்கை, அதாவது கேப்பிட்டலிசம் (capitalism) இருக்கு.

மனிதனோட உழைப்பையும், சிந்திக்கும் திறனையும் நாம கண்டிப்பா பாராட்டியே ஆகணும். ஏன்னா, இந்த உலகம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. ஒரு சயின்டிஸ்ட் (scientist) கண்டுபிடிக்கிறதை, இன்னொருத்தர் மேனுஃபேக்சர் (manufacture) பண்றார், வேறொருத்தர் டிஸ்ட்ரிபியூட் (distribute) பண்றார். நாம உழைச்சு சம்பாதிச்சு, அதை காசு கொடுத்து வாங்குறோம்.


மார்க்கெட் மற்றும் மைய அதிகாரம் (Market & Centralized Power)

ஆனா, இங்கதான் ஒரு ட்விஸ்ட் இருக்கு. ஒரு சயின்டிஸ்ட் ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே, இதை எத்தனை பேர் வாங்குவாங்க, இதுக்கு மார்க்கெட் (market) இருக்கானு முதலாளிகள் பார்க்குறாங்க. மார்க்கெட் இருந்தா மட்டும்தான் அந்த ரிசர்ச் (research) அடுத்த லெவலுக்குப் போகும், இல்லன்னா அப்படியே டிராப் (drop) பண்ணிடுவாங்க. இதுதான் முதலாளித்துவத்தோட அடிப்படை பிசினஸ். சில சமயம் ஒரு பொருளைத் தயாரிச்சுட்டு, அதுக்கப்புறம் அதுக்கான மார்க்கெட்டை அவங்களே உருவாக்குவாங்க. இந்த சந்தை போட்டிதான் உலகத்தையே ஆளுது.

உதாரணத்துக்கு, உலகத்துல ஒரு 100 பேருக்கு மட்டும் இருக்கிற ஒரு அபூர்வமான நோய்க்கு ஏன் மருந்து கண்டுபிடிக்க மாட்டேங்குறாங்க? ஏன்னா, அதுக்கு பல கோடி செலவாகும். ஆனா வாங்குறதுக்கு வெறும் 100 பேர் தான் இருக்காங்கன்னா, முதலாளிகளுக்கு லாபம் (profit) கிடைக்காது. அதனால அதைத் தயாரிக்கவே மாட்டாங்க.

இப்படி மார்க்கெட்டைப் பிடிக்கணும்னு நினைக்கும்போதுதான், அங்க ஒரு 'மையம்' அதாவது சென்டர் (center) உருவாகுது. இந்த சென்டர் என்ன பண்ணும்னா, அதிகாரத்தை ஒரு இடத்துல குவித்து, மேலிருந்து கீழ் வரைக்கும் எல்லாரையும் தன் கட்டுப்பாட்டுல வச்சுக்கப் பார்க்கும். அவங்க ஒரு மெட்டா நேரேட்டிவ் (meta-narrative) அதாவது ஒரு பொதுவான கருத்தை உருவாக்கி, அதை மக்கள் மேல திணிச்சு, ஒரு பொருளை வாங்கவோ இல்ல ஒரு செயலை செய்யவோ தூண்டுவாங்க. சுருக்கமா சொன்னா, மாடர்னிசம் (modernism) என்கிறது அதிகாரம் ஒரு இடத்துல குவிஞ்சு, மார்க்கெட்டை கன்ட்ரோல் பண்ணி, லாபத்தைப் பெருக்குறதுதான். இது ஒரு பெரிய ஆபத்து.


போஸ்ட் மாடர்னிசம் (Post-modernism) என்றால் என்ன?

இந்த மைய அதிகாரத்தை உடைக்கிறதுதான் போஸ்ட் மாடர்னிசம் (post-modernism). இவ்வளவு பெரிய கேப்பிட்டலிசத்தையும், பவர் சென்டரையும் (power center) ஒரு தனி மனிதனால அழிக்க முடியுமா?

மையம் அப்படின்றது ஏதோ ஒரு அரசாங்கத்துலயோ இல்ல பெரிய கம்பெனியிலயோ மட்டும் இருக்குன்னு நினைக்கக் கூடாது. அது உங்களை சுத்தியும் இருக்கு, ஏன் நீங்களே கூட ஒரு மையமா இருக்கலாம்! போஸ்ட் மாடர்ன் பிலாசபர்ஸ் (post-modern philosophers) என்ன சொல்றாங்கன்னா, இந்த மையத்தை மொத்தமா அழிக்க முடியாது, ஆனா அதைத் தொடர்ந்து மாத்திக்கிட்டே இருக்கணும் (change / deconstruct).

ஒரு சிம்பிள் எக்ஸாம்பிள் (example): உங்க வீட்ல எல்லா முடிவுகளையும் உங்க அப்பாதான் எடுக்குறார்னா, அது ஒரு மையம் (center). நீங்க வளர்ந்து உங்க கைக்கு அந்த அதிகாரம் வரும்போது, நீங்க மட்டுமே முடிவு எடுக்காம... உங்க அம்மா, உங்க வைஃப் (wife)-னு எல்லாரையும் சேர்த்துக்கிட்டு (inclusive) முடிவு எடுக்குறீங்க பாத்தீங்களா? அங்க நீங்க அந்த மைய அதிகாரத்தை உடைக்கிறீங்க.

பாட்டம் லைன் (Bottom line): போஸ்ட் மாடர்னிசம் அப்படிங்கிறது 'இப்படித்தான் சிந்திக்கணும்'னு சொல்லித் தர்ற ஒரு கோட்பாடு கிடையாது. எதையுமே கேள்வி கேட்காம, அப்படியே பிளைண்டா (blindly) ஏத்துக்காதீங்கன்னு சொல்ற ஒரு லைஃப் ஸ்டைல் (lifestyle).

More Articles

யார் இந்த GenZ? பெரியவர்கள் ஏன் இவர்களைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?
யார் இந்த GenZ? பெரியவர்கள் ஏன் இவர்களைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?என்ன யோசிக்க வேண்டும் என்பதல்ல, எப்படி யோசிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுப்போம்! ✨
Art Without Emotion Is Just Noise — And That’s What AI Makes
Art Without Emotion Is Just Noise — And That’s What AI MakesEveryone’s talking about how AI is replacing art — but is that really true? Lets exploring why tools like AI can never replace the soul and emotion of a true artist. From the timeless magic of Spirited Away to the powerful voice of Michael Jackson, this piece challenges the popular belief that art is just about style or technique. If you think uploading your selfie to an AI model makes you part of the "new art movement," think again.
AI the Good the Bad and the Funny
AI the Good the Bad and the FunnyDiscover the captivating world of Artificial Intelligence (AI) through the immersive event, "AI: The Good, The Bad, and the Funny." Held on May 27th, 2023, this event provided a unique opportunity to delve into the upcoming advantages and disadvantages of AI technology. From the very beginning, the event sparked curiosity and intrigue as the host set the stage, introducing the audience to an agenda filled with informative presentations and interactive sessions. Attendees were taken on a journey through the evolution of AI, from its humble beginnings to the remarkable advancements we witness today.
Two Days Workshop in Payilagam
Two Days Workshop in PayilagamI have recently led a successful 2-day seminar on HTML and CSS at Paiylagam Institute, where the students were attentive and interactive. The instructor effectively imparted their knowledge of web development to the students, who actively participated in hands-on exercises and a real-world project. At the end of each day, the instructor held a fun review game to reinforce the material learned, creating a balanced and enjoyable learning experience. The seminar was a resounding success and the instructor looks forward to leading more seminars in the future.